முழுக்க முழுக்க மசாலா தெறிக்கும் ‘குட் பேட் அக்லி’ டீசர் வெளியீடு எப்போது?
தனக்கு பிடித்த கதையில் அஜித் நடித்தார். மகிழ் இயக்கினார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இனி, வருவது.. முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் ‘குட் பேட் அக்லி’. இப்பட டீசர் பற்றிய தகவல் பார்ப்போம்..
‘தல’ அஜித்துக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் ரசிகர்கள் திரிஷாவை எதிர்பார்த்துள்ளனர்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 10-ந் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில், இப்படத்திற்காக ‘தீனா’ படத்தில் இடம்பெற்ற ‘வத்திச்குச்சி பத்திக்காதுடா’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட உள்ளதாக அப்டேட் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வரும்14-ந் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ‘விடாமுயற்சி’ படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு (மசாலா& மாஸ் சீன்ஸ்) இல்லாததால், அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக் இயக்கிய ‘குட் பேட் அக்லி’ செம காரமாய் விரைந்து வருகிறது.