Action Sequences in Beast Movie

மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Action Sequences in Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் இந்த படத்திற்கான படப்பிடிப்புகளை முழுமையாக நிறைவு செய்து விட்டனர். படம் 2022 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் : இன்று முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி விழா

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக், டீசர் உள்ளிட்டவைகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது இந்த படத்தின் சண்டைக்காட்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த காட்சி ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சியாக இருக்கும் என தெரிகிறது. இதனை திரையில் பார்க்க ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.
Attachments area