கள்ளகாதலுக்காக தன் இரு குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொன்றுவிட்டு தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார் குன்றத்தூர் அபிராமி .

அபிராமியை சிறையில் அடைத்த நாள் முதல் இன்று வரை அபிராமியின் கணவரோ, அல்லது அபிராமியின் உறவினர்களோ யாரும் இதுவரை சிறையில் வந்து அபிராமியை பார்த்து சென்றதில்லை. அபிராமியின் தந்தை கூறியதாவது, ‘ அபிராமி மன்னிக்க முடியாத குற்றம் செய்துவிட்டார், அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும், அவருக்காக ஜாமீன் கோரபோவதில்லை’ என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், குழந்தைகளை கொன்ற குற்ற உணர்வு, உறவினர்கள் ஒதிக்கியதால் ஏற்பட்ட மனஉளைச்சல் – இல் அபிராமி சிறையில் தற்கொலைக்கு முயன்றார் என தகவல் வெளியானது. ஆனால் அபிராமி தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் தகவல் பொய் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அபிராமியின் உறவினர் ஒருவர் மனு மூலம் சிறையில் அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அபிராமி அவரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். மேலும் அடுத்த முறை தன்னை பார்க்க வரும்போது தன் குழந்தைகளின் புகைப்படத்தை எடுத்து கொண்டு வருமாறு அபிராமி கூறியுள்ளார்.