சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணி கடை ஊழியர் உடன் கள்ளகாதல் ஏற்பட்டது.

இதை அடுத்து அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு இடையூறாக இருந்த தனது 2 குழந்தைகளையும் கடந்த மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் துடிக்க துடிக்க கொன்றார்.

மேலும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனையும் கொல்ல திட்டம் தீட்டி, ஸ்கெட்ச் போட்ட நிலையில் அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பின்னர், சுந்தரத்தின் ஆலோசனைப்படி கேரளாவிற்கு தப்பி சென்ற அவரை, போலீசார் நாகர்கோவிலில் கைது செய்தனர்.

இதையடுத்து சென்னை கொண்டுவரப்பட்ட அபிராமி மற்றும் அவரது கள்ளகாதலன் சுந்தரம் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டனர். பின் அபிராமி மற்றும் சுந்தரத்தின் நீதிமன்ற காவல் அக். 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது, அபிராமி சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது. புழல் சிறையில் உள்ள அவர் நேற்றிரவு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.