Aari Fans Voice in MNM Meeting

கமலஹாசனின் அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் ரசிகர்கள் அலப்பறை செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aari Fans Voice in MNM Meeting : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் நிகழ்ச்சி முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் நடிகர் ஆரிக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவர்தான் இம்முறை டைட்டிலை வெல்லுவார் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அனைத்து போட்டியாளர்களின் வெறுப்பையும் எதிர்ப்பு அவர் பிக் பாஸ் வீட்டில் தனியாளாக சாதித்து வருகிறார்.

இந்த நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மைய கட்சிக்கான பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டபது அங்கிருந்த ரசிகர்கள் ஆரி ஆரி என கோஷமிட்டு அலப்பறை செய்துள்ளனர்.

இந்த வீடியோவை ஆரி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.