Aari Daughter Birthday Celebration

பிக்பாஸ் ஆரி தனது மகள் பிறந்த நாளை புதுவிதமாக கொண்டாடியுள்ளார்.

Aari Daughter Birthday Celebration : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஆரி.

இவர் இறுதிக் கட்டம் வரை சென்று ஆறு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார்.

பிக் பாஸ் ஆரியின் மகள் பிறந்த நாளை புது விதமாக கொண்டாடி இருக்கிறார்.. இது கூட நல்லா இருக்கே!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய உடன் இவர் படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆரியின் மகளான ரியாவிற்கு இன்று பிறந்தநாள். புதுவிதமாக தனது வீட்டில் ரியாவுடன் இணைந்து விதைகளை நட்டு உள்ளார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.