பட்டைய கிளப்புது ‘மோனிகா’ பாடல்: பல இளம்பெண்கள் ஃப்ரீ புரமோஷன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது.
இப்படத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த், டி. ராஜேந்தர் நடனமாட வெளியான ‘சிக்கிடு’ பாடலை விட, பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் சாகிர் ஆட்டம் போட்ட ‘மோனிகா’ பாடல் தற்போது செம டிரெண்டாகி விட்டது.
சவதீகா, கனிமா, ஜிங்குச்சா பாடல்களுக்கு இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் நடனமாடிய நிலையில், பூஜா ஹெக்டே போலவே சிகப்பு கலர் கவுன் அணிந்துகொண்டு ஹார்பர் பின்னணியில் பல இளம்பெண்கள் போடும் கிளாமர் குத்தாட்டம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடினாலே, அந்த பாடல்கள் குறைந்த பட்சம் 100 மில்லியன் வியூஸை கடந்து விடுகின்றன. அவ்வகையில், ‘மோனிகா’ பாடல் இதுவரை 25 மில்லியன் வியூஸ்களை நெருங்கியுள்ளன. படம் வெளியாவதற்கு முன்பாகவே 50 மில்லியன் வியூஸை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்ததைப்போல இந்த பாடலும் ஹிட் அடித்துள்ளது. பல இளம்பெண்களும் பூஜா ஹெக்டேவுக்கே டஃப் கொடுத்து, அவரை விட கவர்ச்சியாக ரீல்ஸ் வீடியோக்களாக வெளியிட்டு இளைஞர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகின்றனர். பாடலை வேறலெவலில் வைரலாக்கி ‘கூலி’ படத்துக்கு ஃப்ரீ புரமோஷனையும் செய்து வருகின்றனர் போலும். எல்லாம் ஒரு விளம்பரம்தான்..!
