ரஜினியை காண ரசிகர்கள் திரண்டதால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய திரை உலகில் ரசிகர்களால் என்றென்றும் கொண்டாடப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்னும் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர்களது படப்பிடிப்பு தற்போது மும்பையை தொடர்ந்து புதுவை-கடலூர் சாலையில் உள்ள பழைமையான ரோடியர் மில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் படப்பிடிப்பு தளத்தில் இருந்த ரஜினியின் வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது ரஜினியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் ரோடியர் மில் முன்பு திரண்டு நின்ற ஏராளமான ரசிகர்கள் மாலை 6 மணியளவில் ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் தான் தங்கிருக்கும் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு செல்லும்போது ஆரவாரம் செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் காருக்குள் இருந்து நடிகர் ரஜினியும் அவர்களுக்கு கையசைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.