விளாத்திகுளம் விவகாரம்.. ரத்தம் கொதிக்கிறது.. கொந்தளித்துப் பேசிய பிக் பாஸ் முத்துக்குமரன்.!!

Web Ads

விளாத்திகுளம் விவகாரம் கேட்டு ரத்தம் கொதிக்கிறது என்று கொந்தளித்து பேசியுள்ளார் பிக் பாஸ் முத்துக்குமரன்

Vilathikulam issue.. Blood boils.. Bigg Boss Muthukumaran who spoke violently.!!
Vilathikulam issue.. Blood boils.. Bigg Boss Muthukumaran who spoke violently.!!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இயற்கை உபாதையை கழிக்க செய்த பெண்ணுக்கு நடந்த கொடுமை பலரது கண்களை கலங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முத்துக்குமரன் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் ஒரு 12 வது படிக்கிற பெண் பிள்ளையை உடம்பில் துணி இல்லாமல் துண்டு துண்டா வெட்டி போட்டு இருக்காங்க என்று ஆதங்கத்தோடு பேசி அவர் இது மட்டுமில்லாமல் மதுராந்தகத்தில் நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். அங்கு 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை பற்றி பேசிய அவர், இதைப் பற்றி பேசுங்கள் என்று சொல்றீங்க என்ன பேசுறது ரத்தம் கொதிக்கிறது என்று பேசியுள்ளார்.

இது மாதிரி பண்றவங்களுக்கு ஏன் வாழ்நாள் சிறை என்று சொல்றீங்க எதுக்கு இவங்களுக்கு சோறு போட்டு என்ன பண்ண போறீங்க மக்கள் தூத்துக்குடியில் போராடிக்கிட்டு இருக்காங்க அவங்க கிட்ட இவன்தான் கண்டுபிடித்து கொடுத்துட்டீங்கன்னா அவங்க கையால கை கால மூக்க பிச்சு எரிஞ்சிட மாட்டாங்களா அதை மத்தவங்க பார்த்தா பயம் வர வேண்டாமா பொம்பள புள்ள பயம் வேண்டாமா காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு என்ன செய்றீங்க என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

 

இது போன்ற சம்பவங்கள் குறித்து முத்துக்குமரன் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

Vilathikulam issue.. Blood boils.. Bigg Boss Muthukumaran who spoke violently.!!
Vilathikulam issue.. Blood boils.. Bigg Boss Muthukumaran who spoke violently.!!