மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், சண்முகப் பாண்டியன் நடிக்கும் படம்..

Web Ads

விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மதுரை வீரன், படைத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சண்​முகப் பாண்​டியன் ஹீரோ​வாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ படம் கடந்த 19-ந்தேதி வெளியானது. சரத்​கு​மார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையடுத்து சண்​முகப் பாண்​டியன் ஹீரோவாக நடிக்​கும் படத்தை இயக்​குநர் மித்​ரன் ஆர். ஜவஹர் இயக்​கு​கிறார். இவர் ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்​திரன்’, ‘திருச்​சிற்​றம்​பலம்’ ஆகிய படங்​களை இயக்​கிய​வர். தற்​போது மாதவன் நடிக்​கும் ‘அதிர்​ஷ்ட​சாலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மித்​ரன் ஆர். ஜவஹர், சண்​முக பாண்​டியன் இணை​யும் படத்​தை, ‘கொம்​புசீ​வி’ படத்​தைத் தயாரித்த ஸ்டார் சினி​மாஸ் நிறு​வனம் தயாரிக்​கிறது. இப்​படத்​தின் ஆரம்​பக்​கட்ட பணி​கள் நடை​பெற்று வரு​வ​தாக​வும், நடிகர்​கள் மற்​றும் தொழில்​நுட்​பக் கலைஞர்​கள் தேர்​வும் நடந்து  வருவதாகவும் கூறப்​படுகிறது.

mithran jawahar is directing new-movie with shanmuga pandian
mithran jawahar is directing new-movie with shanmuga pandian