பிரதீப் ரங்கநாதன், அருண் விஜய் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ்..

Web Ads

பாலா இயக்கத்தில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார் அருண் விஜய். இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ படத்தில் வில்லனாக நடித்தார்.

இந்த ‘ இட்லி கடை’ படத்துக்கு முன்னதாக அருண் விஜய் நாயகனாக நடித்து முடித்த படம் ‘ரெட்ட தல’. சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது இப்படம் டிசம்பர் 18-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படமும் வெளியாகவுள்ளது.

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் 3-வது தயாரிப்பாக ‘ரெட்ட தல’ உருவாகி இருக்கிறது. இதனை திருக்குமரன் இயக்கியுள்ளார். ஸ்டைலீஷ் ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் அருண் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய்யுடன் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அருண் விஜய் படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது ‘ரெட்ட தல’ படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒளிப்பதிவாளராக டிஜோ டாமி, இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ‘ரெட்ட தல’ லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தா சரிதானே.!

retta thala movie release on december 18th
retta thala movie release on december 18th