Web Ad 2

சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: இயக்குநர் மாரி செல்வராஜ் நம்பிக்கை..

Web Ads

துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க ‘பைசன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 17-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘தீக்கொளுத்தி’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவிக்கையில் ‘பைசன்’ திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை முன்வைத்து உருவான கதை. இப்படியொரு கதையை தென்மாவட்ட மக்களின் வாழ்க்கையோடு கூற வேண்டும் என நினைத்தபோது சகோதரர் மணத்தி கணேசனிடம் சென்று, உங்கள் வாழ்க்கையை என் திரைமொழியில், அரசியல் பார்வையோடு சொல்ல விரும்புகிறேன் என்றேன். அவர் ‘ நீ ஒரு விஷயம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்’ என ஒப்புக்கொண்டார். இப்படித்தான், ‘பைசன்’ உருவானது.

நான் ஓர் இயக்குநராக புகழையும் பணத்தையும் சம்பாதித்துவிட்டேன். அதற்காக, என் மக்களுக்கு என்ன செய்தேன் என்கிற கேள்விக்குப் பதில் பைசன்தான். என்னுடைய உச்சபட்ச உணர்வும் கர்வமும் பைசன்தான்.

பைசன் படத்தில் தென் மாவட்டத்திற்குள் வாழ்க்கையை தொலைத்த நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்திய படம்தான் ‘பைசன்’.‘பைசன்’ படத்தின் வெற்றியை விட இப்படம் இந்த சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என தெரிவித்தார்.

bison film will have a huge impact on society director mari selvaraj
bison film will have a huge impact on society director mari selvaraj