ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் அருண்குமாரா?

ரஜினி-கமல் இணையவிருக்கும் படத்தின் தகவல்கள் குறித்துப் பார்ப்போம்..
கமல்ஹாசன் விரைவில் ரஜினியுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருப்பதாக அறிவித்தார். அதைப்போல, ரஜினியும் கமலுடன் இணைவதை உறுதிப்படுத்தினார். அவ்வகையில், 46 வருடங்கள் கழித்து கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இப்படம் எப்போது துவங்கும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
கமல்ஹாசன் தற்போது அன்பறிவு இயக்கத்தில் KH237 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதைப்போல, ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் இருக்கின்றார். எனவே, இதையெல்லாம் முடித்துக்கொண்டு ரஜினி-கமல் படம் துவங்கும் என தெரிகின்றது.
இதற்கிடையில், கமல்ஹாசன், வீர தீர சூரன் படத்தின் இயக்குநர் அருண்குமாரை சந்தித்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அருண்குமார் இயக்கத்தில் கமல் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு, கமலே அப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தது. தற்போது கமல் அருண்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கின்றது. அது தொடர்பாகவே கமல் மற்றும் அருண்குமார் சந்திப்பு நடந்திருப்பதாக தெரிகின்றது.
இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு, ரஜினி படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதைப் பற்றி பேசவே அருண்குமார் மற்றும் கமல்ஹாசனின் சந்திப்பு நடந்திருப்பதாக தெரிகிறது. ஆனால், கமல்ஹாசன் அருண்குமார் இயக்கத்தில் விரைவில் நடிக்கப்போகிறார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
அருண்குமார் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீர தீர சூரன் என அவரின் படங்கள் தனித்துவமானதாகவும், ரசிகர்களிடம் தாக்கத்தை உண்டாக்கிய படங்களாகவும் உள்ளது.
இந்நிலையில், ரஜினி-கமல் இணையவிருக்கும் படத்தை அருண்குமார் இயக்கவுள்ளாரா? என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.!
