குழந்தைக்கும் யானைக்கும் இடையேயான பிணைப்பு: கும்கி-2 படம் குறித்து இயக்குநர்..

Web Ads

தமிழ் சினிமாவில் மைனா, கயல், தொடரி, கும்கி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் பிரபு சாலமன். இவர் தற்போது கும்கி-2 படத்தை இயக்கி வருகிறார்.

முன்னதாக, யானையை மையமாகக் கொண்டு பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கும்கி 2’ படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மதி அறிமுகமாகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை பென் ஸ்டுடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா இணைந்து தயாரித்துள்ளனர்.

குழந்தைக்கும், யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத்தின் கதை. இயற்கை, மனிதன், யானைகளின் உறவுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

kumki 2 film speaks about a boy and an elephant relation
kumki 2 film speaks about a boy and an elephant relation