அட்லி-அல்லு அர்ஜுன் இணையும் படத்திற்கு, தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட்..

அட்லி இயக்கும் படத்தின் தகவல்கள் பற்றிக் காண்போம்..
‘புஷ்பா 2’ வெற்றிப்படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும், ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவர் தொடர்பான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதில், அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்க இருக்கிறார்.
ஆயுதம் தாங்கிய வீராங்கனைபோல, அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ‘அவதார்’ போன்ற வேறு ஒரு பிரபஞ்சம் உட்பட இரண்டு தனித்துவமான உலகில் இதன் கதை நடக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
