Web Ad 2

இந்தியாவின் பணக்கார நடிகரான நாகர்ஜூனா, எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டார்?: ரஜினி வாய்ஸ், வைரல்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. முன்னதாக நிகழ்ந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி படம் குறித்து சர்ப்ரைஸாக பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

‘நாகர்ஜுனா இப்படத்தில் எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டார். ஏனெனில், அவரை பணம் கொடுத்து வாங்க முடியாது. இந்தியாவின் பணக்கார நடிகர் அவர்’ என அவரைப் பற்றி பேசியிருந்தார். அவ்வகையில், நாகர்ஜுனாவுக்கு எத்தனை கோடி சொத்து இருக்கிறது என பார்ப்போம்..

* நாகர்ஜுனா இந்தியாவின் பணக்கார நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.3310 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு நடிப்பு ஒரு சைடு பிசினஸ் தான். ஏராளமான தொழில்களை செய்து வருகிறார். இவரின் தந்தை நாகேஸ்வரராவ்வும் மிகப்பெரிய பணக்காரர்.

* நாகர்ஜுனாவுக்கு சொந்தமாக அன்னபூர்ணா ஸ்டூடியோ சுமார் 22 ஏக்கரில் அமைந்துள்ளது. அந்த ஸ்டுடியோவின் மதிப்பு மட்டும் சுமார் 200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இங்கு ஏராளமான படங்களின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
சொந்தமாக பிரைவேட் ஜெட்டும் இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

* மேலும் BMW 7 சீரிஸ், Porsche Cayenne, BMW M6 போன்ற சொகுசு கார்களும் உள்ளன. அந்த கார்களின் மதிப்பு சுமார் 6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

* இவர், படங்களில் நடிக்க ரூ.20 முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இத்தனை ஆண்டுகள் ஹீரோவாக நடித்து வந்த நாகர்ஜுனா, ‘கூலி’ படத்தில் தான் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடித்துள்ள சைமன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nagarjuna is the richest actor in south india here the networth
nagarjuna is the richest actor in south india here the networth