பறந்து போ படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

paranthu po movie ott release date update
மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் வசூலிலும் தூள் கிளப்பியது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதாவது வருகிற ஆகஸ்ட் ஐந்தாம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

paranthu po movie ott release date update