அப்பா மறைந்த பிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது.. வடிவேல் பாலாஜி மகன் வேதனை..!

தனது அப்பாவின் மறைவு குறித்து வேதனையாக பேசி உள்ளார் வடிவேல் பாலாஜி மகன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்று சொல்லலாம்.
2020 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக இவர் உயிரிழந்தார் இவரின் இறப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது அவரது மகன் அப்பா குறித்து. பேசி இருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அப்பா இருந்தவரை எந்த ஒரு கஷ்டமும் தெரியாமல் வளர்த்து விட்டார் ஆனால் இப்போது அப்பா மறைந்த பிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது நான் இப்போது ஒரு வண்டி வாங்கினேன் அதன் EMI கூட என்னால் கட்ட முடியவில்லை அதை கட்டுவதற்கே ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் அப்பா இருந்தால் இந்த கஷ்டம் எல்லாம் இல்லை என்னோட ஆசை இப்போது எனது அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
