ஷகிலாவிடம் கிரண் பேசிய பேச்சு; வைரல்

Web Ads

‘பிக் பாஸ் புகழ்’ நடிகை வனிதா விஜயகுமார் இயக்கியுள்ள ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ படம், ஜூலை 4-ந்தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கிரண் இணைந்துள்ளார்.

தற்போது, கிரணுக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் இன்ஷ்டா பக்கத்தில் கவர்ச்சி வீடியோ, போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இது ஆபாசமாக மாறி பேசுபொருளாகி விடுவதால், பல ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த பலர், ‘பட வாய்ப்புக்காக இப்படியா என்றும், பணத்திற்காக இப்படி எல்லாம் செய்யலாமா? என கேட்டு வருகின்றனர். சில ரசிகர்கள் கிரணின் அழகை வர்ணித்து லைக்குகளை குவித்தும் வருகின்றனர்.

முன்னதாக, கிரண், மலையாள நடிகை ஷாகிலா நேர்காணலில் தெரிவிக்கையில், ‘நான் கொரோனா காலத்தில் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்டேன். கையில் இருந்த அனைத்து ப்பணமும் தீர்ந்துபோய் விட்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.

அதனால், என்னுடைய நண்பர்கள் குழுவில் கடனாக பணம் கிடைக்குமா என கேட்டேன். அதில், சிலர் நாங்கள் பணம் தருகிறோம், அதற்கு பதிலாக என்ன தருவாய் என்று கேட்டார்கள். அவர்களின் கேட்பதில் இரண்டு அர்த்தம் இருப்பது கூட எனக்கு தெரியாமல், பணம் வந்ததும் திருப்பி தந்து விடுகிறேன் என்று நான் பதில் அளித்திருந்தேன்.

ஆனால், அவர்களோ எங்களுக்கு பணம் எல்லாம் வேண்டாம். அதற்கு பதிலாக வேறு ஒன்று வேண்டும் என்று என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என மனம் நொந்து பேசியிருந்தார்’ கிரண். தற்போது இந்நிகழ்வு வைரலாகி வருகிறது.

actress kiran speech viral