சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ பட வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி

‘ஊர் வாயை மூட உலை மூடி போதாது. அதற்கு உடையவர் தானே வரவேண்டும்’ என்பது போல ‘வாடிவாசல்’ பற்றிய நிதர்சனம் பார்ப்போம்..
‘வாடிவாசல்’ படத்திற்காக வெற்றிமாறன் 2 வருடத்திற்கு மேல் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டதாகவும், சூர்யாவால் கொடுக்க முடியாத சூழ்நிலையாலும் இப்படம் கைவிடப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒருமுறை ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த வதந்தியை மறுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கண்டிப்பாக வாடிவாசல் துவங்கும். அநேகமாக ஜூன் மாதம் துவங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெற்றிமாறன் மற்றும் சூர்யாவுடன் சந்தித்து ‘வாடிவாசல்’ படத்தை பற்றிப் பேசியுள்ளார் தாணு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு சூர்யா ரசிகர்கர்களுக்கு பாசிட்டிவான செய்தியை கொடுத்தார்.
எனவே, கண்டிப்பாக ஜூன் மாதத்திற்குள் ‘வாடிவாசல்’ துவங்கிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கின்றார். இதனால், ரசிகர்களின் குழப்பம் அதிகரித்தது.
ஆர்.ஜே.பாலாஜியின் படத்திற்கு பிறகு, சூர்யா வாடிவாசல் படத்தில்தான் நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில், திடீரென வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. இதனால் வாடிவாசல் நடக்குமா? இல்லை மீண்டும் தள்ளிப்போய்விட்டதா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்தது. அதற்கு ஏற்றாற்போல தற்போது படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. ரசிகர்கள், சூர்யா கண்டிப்பாக வாடிவாசல் படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கலைப்புலி தாணு ‘வாடிவாசல்’ படம் பற்றி தெரிவிக்கையில், ‘தற்போது அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வேலைகள் முடிந்தவுடன் கண்டிப்பாக ‘வாடிவாசல்’ படப்பிடிப்பை துவங்கிவிடலாம். குறிப்பாக, படத்தில் இடம்பெறும் சூர்யாவின் என்ரி சீன் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரும் என்பது உறுதி’ என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

