ஒரேயொரு பாட்டுக்கு செம குத்தாட்டம்; பூஜா ஹெக்டேவை தொடர்ந்து ராஷ்மிகா

ஒரு பாட்டுக்கு கலக்கலாய் குத்தாட்டம் போட கதாநாயகிகள் ரெடிதான். ஆனால், கேட்ட சம்பளம் ரெடியா? என்பதுதான் திரை வியாபாரம். இது குறித்த தகவல்கள் காண்போம்..
நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’ மற்றும் விக்கி கௌஷலுடன் ‘சாவா’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான்கானுடன் நடித்திருந்தார்.
மேலும், தனுஷ் நடிப்பில் ஜூன் மாதம் ரிலீஸாகும் ‘குபேரா’ படத்தில் ஜோடியாக இணைந்துள்ளார். அவ்வகையில், தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடம் வகித்திருக்கிறார். பல வெற்றிப் படங்களில் ஹீரோயினியாக நடித்திருந்தாலும், இதுவரை ஒரே ஒரு குத்துப்பாட்டுக்காக எந்தப் படத்திலும் ஆடியதில்லை.
இந்நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘டிராகன்’ படத்தில் ராஷ்மிகா மந்தனா ஒரே பாடலுக்கு செம ஹாட் கிளாமர் டான்ஸ் ஆடவுள்ளார்.
இது தொடர்பாக, ராஷ்மிகா மந்தனாவை பிரசாந்த் நீல் அணுகியதாக கூறப்படுகிறது. இந்தப் பாடலில் நடனமாட ராஷ்மிகா கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு தரப்பும் முடிவு செய்துள்ளது. இதனால், ராஷ்மிகா – ஜூனியர் என்.டி.ஆர் காம்போவில் செம குத்தாட்டம் தெறிக்கப்போவது உறுதியாகிவுள்ளது.
‘டிராகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ந்தேத வெளியாகவுள்ளது. தற்போது கர்நாடகாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 25 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
முன்னதாக, விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஹீரோயினி பூஜா ஹெக்டே, ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஒரேயொரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
