இன்ஸ்டாவில், வாரிசு நடிகர் கண்ணீர் விட்டு அழுகை: திரையுலகில் பரபரப்பு..

Web Ads

மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது இன்ஸ்டா பக்கத்தில் லைவ் வீடியோவை பதிவிட்டார். அதில், அவர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோவை பதிவிட்டார். அதில், அவர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபில் கானை பொறுத்தவரை அவர் தனது தந்தை நடிப்பில் வெளியான ‘கரீப் கரீப் சிங்கிள்’ படத்தில் உதவி கேமராமேனாக பணியாற்றினார். அடுத்து அவர் ‘குலா’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘ஃப்ரைடே நைட் ப்ளான்’, ‘லாக் அவுட்’ ஆகிய படங்கள் அவர் நடிப்பில் வெளியாகின.

பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக எப்போதும் ஒரு சர்ச்சை இருக்கும். அதுவும் குறிப்பாக சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு மிக தீவிரமாக இது விவாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், பாபில் கான் இன்ஸ்டாகிராமில் சிலரின் பெயரை குறிப்பிட்டு அழுதிருந்தார். தற்போது குறிப்பிட்டுள்ள அந்த பெயர்கள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

bollywood actor babil khan cries in video
bollywood actor babil khan cries in video