கல்யாணம் ஆகாமலே தாயானவரா நடிகை ஸ்ரீலீலா?

Web Ads

பேரன்பும் பெருங்கருணையுமாய் காட்சியளிக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்..

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது. வருகிற 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது.

பாலிவுட்டில் ஸ்ரீலீலா அனுராக் பாசுவின் பெயரிடப்படாத காதல் த்ரில்லர் படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீலீலா தனது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரை அறிமுகப்படுத்தினார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் குழந்தையை கட்டிப்பிடித்தபடி இருக்கும் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

‘வீட்டிற்கு ஒரு புதியவர். இதயங்களின் ஆக்கிரமிப்பு’ என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்தப் பெண் குழந்தையைப் பற்றிய கூடுதல் தகவல்கள் எதையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஸ்ரீலீலா ஏற்கனவே பல ஆதரவற்ற குழந்தைகளையும், சிறுமிகளையும் தத்தெடுத்துள்ளார். இதனால், இதுவும் அவர் தத்தெடுத்துள்ள குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தெரியாமல், கல்யாணம் ஆகாமல் தாயானவர் என்ற வதந்திக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் மவுனம் கடைப்பிடிக்கிறார்.

actress sreeleela welcomes new baby to her family
actress sreeleela welcomes new baby to her family