எனக்கு இன்னொரு பேரும் இருக்கிறது: சட்டசபையில் ரவிமோகன் பேச்சு.! #கராத்தே பாபு டீசர்

அரசியல்வாதி சண்முக பாபு என்ற ‘கராத்தே பாபு’ பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்..
அதாவது ‘ஜெயம் ரவி என என்னை அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவிமோகன் என இனிமேல் ரசிகர்கள் அழைக்க வேண்டும்’ என அன்புக் கோரிக்கை வைத்தார் ஜெயம் ரவி Sorry ரவி மோகன்.
அதுபோல அவரது படத்தின் தலைப்பும் அவரைப் போலவே சண்முக பாபு என்பதில் இருந்து கராத்தே பாபுவாக மாற்றம் பெற்றிருக்கிறது.
இதுவரையில், ரவி அரசியல் கதைக்களத்தில் நடிக்காத நிலையில், அதிரடி அரசியல்வாதியாக அதுவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையப்படுத்திய கதையில் ‘கராத்தே பாபு’ என்கிற அரசியல் தலைவராக வருகின்றார்.
‘டாடா’ பட இயக்குனர் கணேஷ்பாபுவின் அடுத்த பட ‘டைட்டில்- டீசர்’ வெளியாகி தற்போது வைரலாகி தெறிக்கிறது. டீசரில்…
மாண்புமிகு தமிழக மக்களே !!#கராத்தே_பாபு எனும் நான் … #KaratheyBabu https://t.co/WyopnAO1bM
Dir by @ganeshkbabu
A @samcsmusic Musical
Produced by #SundarArumugam @Screensceneoffl #RM34 #RaviMohan pic.twitter.com/mxObCEE0ku— Ravi Mohan (@iam_RaviMohan) January 29, 2025
‘எதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரை தெரிந்துகொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்? பெயரில் என்ன இருக்கிறது? என எதிர்க்கட்சித் தலைவரான கே.எஸ். ரவிக்குமார் கேட்கிறார்.
பெயரில் தான் எல்லாமே இருக்கு என முதல்வர் நாசர் விளக்கம் கொடுக்கிறார்.
பின்னர், ஆர்.கே. சட்டமன்ற உறுப்பினர் என அவைத்தலைவர் அழைத்ததும், ரவி மோகன் எழுந்து.. மாண்புமிகு முதலமைச்சர், பெயரின் முக்கியத்துவத்தை மிக அழகாக விளக்கிப் பேசினார். அவருடைய தமிழ்ப் புலமைக்கு நான் என்றும் தாசனே. அவர் என்னுடைய பழைய பெயரை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.
உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாக தான் தெரியும். ஆனால், எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது.17 வருடங்களுக்கு முன் ஆர்.கே. நகர் மக்களால் எனக்கு கொடுக்கப்பட்ட பெயர் அது. அந்த பெயர் தான் இன்று என்னை உங்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அந்த பெயர்… என ரவி சொல்ல ‘கராத்தே பாபு’ என டைட்டில் கார்டு வருகிறது.
‘தமிழ்நாட்டை தமிழகமாக மாற்றிவிடக் கூடாது’ என்கிற வசனத்தை நாசர் பேசும்போதே, டைட்டில் டீசர் அனல் பறக்கிறது. இந்த டீசர் குறித்து இணையவாசிகள், ‘பாவம்.. தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைமை என்னவாகுமோ?’ என ட்ரோல் செய்வதும் அலப்பறையாய் தெறித்துக் கொண்டிருக்கிறது.
எப்படியோ.. வெற்றிப்படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வரும் ரவிக்கு, ‘காதலிக்க நேரமில்லை’ படமும் வசூல் ரீதியாக திருப்திப்படவில்லை. இந்நிலையில், அரசியல்வாதியான கராத்தே பாபு வெற்றிக்கு கை கொடுப்பாரா? ரிசல்ட் வரட்டும்.. பார்ப்போம்.!
