சூரியின் எதிர்பார்ப்பை, சிவகார்த்திகேயன் நிறைவேற்றுவாரா?

‘அமரன்’ திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் வேற லெவல் என்பது தெரிந்ததே. இந்நிலையில், சூரி வெளிப்படுத்தியுள்ள திரையார்வம் வருமாறு:
திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படம் வரவேற்பை பெற்றதையடுத்து, இதன் 2-ம் பாகமும் வெளியாகி தற்போது கலெக்ஷனிலும் எகிறி வருகிறது.
இந்நிலையில், நடிகர் சூரி கூறியதாவது: ‘விடுதலை பார்ட் 1 படம் எப்படி மக்களுக்கு பிடித்த படமாக இருந்ததோ, அதே போன்று விடுதலை பார்ட் 2 படமும் உங்களுக்கு பிடித்த படமாக வந்திருக்கிறது.
இப்போது, எனக்கு ‘மாமன்’ பட ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இப்படம் அண்ணன்-தங்கை பாசத்தைப் பற்றி மண்வாசனையோடு சொல்லும்.
இந்நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யாரும் என்னை தளபதி, சூப்பர் ஸ்டார் என கோஷமிடவே வேண்டாம்.. வேண்டாம்.
மேலும், சிவகார்த்திகேயன் உடன் இணைந்து படம் நடிக்கவும் ஆர்வத்தில் இருக்கிறேன். அது எப்போது நடைபெறும் என தெரியவில்லை. அப்போது, படத்தில் அவர்தான் ஹீரோவாக இருப்பார்.
தற்போது விடுதலை 2 படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் படக்குழுவினரோடு எனக்கும் மகிழ்ச்சி. இப்படத்தின் பார்ட் 3 குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்றார்.
