விவாகரத்து சர்ச்சை பற்றிய பேச்சுக்கு, ஜெயம் ரவி மனம் திறந்து பதில்

திருமணம் என்பது சொர்க்கத்திலோ ரொக்கத்திலோ நிச்சயிக்கப்படுவதில்லை. கருத்தொருமித்த காதலில் கரம் பிடிக்கும் பேரன்பு..! அதாவது இப்ப விஷயம் என்னன்னா..
விவாகரத்து சர்ச்சை குறித்தும், மக்கள் தன்னை பற்றி பேசுவது குறித்தும், ஜெயம் ரவி மனம் திறந்து பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2009 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன்னுடைய மனைவி உடனான விவாகரத்தை அறிவித்த சம்பவம் திரையுலகில் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
மேலும், சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த பலர், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காகவாவது சேர்ந்து வாழ்வார்கள் என தங்களின் கருத்தை தெரிவித்தனர்.
ஆனால், ஜெயம் ரவி தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக உள்ளார். தன்னுடைய அறிக்கையில் கூட ஜெயம் ரவி, குடும்பத்தின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைக்கு பின்னர், ஆர்த்தியின் பெயர் அதிகளவிலான விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், ஆர்த்தி தன்னுடைய தரப்பில் இருந்து, ஜெயம் ரவியின் அறிக்கையில் குறிப்பிட்ட விஷயத்தை மறுத்தார். தன் மீது களங்கம் விளைவிக்கும் விதமாக சில பேச்சுகள் அடிபட்டதால் மட்டுமே இந்த விளக்கத்தை கொடுப்பதாகவும்,
ஜெயம் ரவி தன்னுடன் ஆலோசித்து விவாகரத்து முடிவை எடுக்கவில்லை. கணவர் ரவியை சந்திக்க முயற்சி செய்தபோது, தான் தடுக்கப்பட்டதாகவும் ஆர்த்தி ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
நறுமணமானது திருமணம்; ஒருமனம் ஆகட்டும் இருமனம்.!
