
96 இயக்குனருடன் கைகோர்க்க உள்ளார் முன்னணி தமிழ் நடிகர்.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி திரிஷா உள்ளிட்ட ஒரு நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் 96.

பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரேம்குமார் எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போதைய முன்னணி நடிகரான கார்த்தியுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
இந்த தகவலை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீ ராம் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
