90 ML Release Date

90 ML Release Date : ஓவியாவின் 90 ml திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

அனிதா உதீப் என்ற பெண் இயக்குனர் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள திரைப்படம் 90 ml. சிம்பு இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

ட்ரைலர் முழுவதும் ஆபாச காட்சிகளும் இரட்டை அர்த்த வசனங்களும் நிறைந்து இருந்ததால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

அந்த சர்ச்சையே இப்படத்தின் ட்ரைலருக்கும் ப்ரோமோஷனாகவும் அமைந்தது. தற்போது வரை இப்படத்தின் ட்ரைலரை 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து விட்டது.

இந்நிலையில் தற்போது இப்படம் வரும் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதனை ஓவியா ஒரு சிறிய ப்ரோமோ வீடியோவுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.