Valimai
வலிமை படத்தின் அப்டேட் கூட வரவில்லை ஆனாலும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதே தவிர படத்தை பற்றிய எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

இருந்தாலும் அஜித் ரசிகர்கள் இன்று ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளனர், அதற்கான காரணம் என்னவென்றால் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியான ஆரம்பம் திரைப்படம் திரைக்கு வந்து இன்றோடு ஆறு வருடங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

இதை தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், மேலும் இதே கூட்டணி வெகு விரைவில் வெளியாக வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.