ஏழாம் அறிவு திரைப்படத்தின் அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் அன்சீன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.