
ஐந்தாவது நாள் லியோ படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5 Days Collection of Leo in Tamilnadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது லியோ திரைப்படம்.

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படம் நான்கு நாளில் உலகம் முழுவதும் நானூறு கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்த நிலையில் ஐந்தாவது நாளில் இந்தியாவில் எவ்வளவு வசூல் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்து இந்திய அளவில் ஐந்து நாளில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.