மூன்று நாளில் மாஸ் காட்டியுள்ளது அயலான் படம் வசூல்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான மாவீரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக்க ரவிக்குமார் இயக்கத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் உட்பட பலர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து உருவாகியிருந்த அயலான் திரைப்படம் வெளியானது. 

குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் வகையில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் மூன்று நாளில் இத்திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் சேர்த்து 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.