2 Point O

2.O Day 6 Collection : ஆறாவது நாளிலும் 2 பாயிண்ட் ஓ படம் மவுசு குறையாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வசூல் நிலவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் சேர்ந்து நடித்திருந்த படம் 2.O. ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது.

மேலும் உலகம் முழுவதும் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

வசூலிலும் மவுசு குறையாமல் தொடர் வேட்டையாடி வருகிறது. ஆறாவது நாளிலும் 2.O படத்தின் வசூல் வேட்டை மாஸாகவே அமைந்துள்ளது.

ஆம், சென்னையில் மட்டும் இப்படம் ரூ 1.17 கோடி வசூல் செய்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் 6 நாட்களையும் சேர்த்து இப்படம் ரூ ரூ 12.58 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.