
எதிர்நீச்சல் சீரியலில் புதியதாக இரண்டு கதாபாத்திரம் என்ட்ரி ஆக உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை தற்போது ஆதி குணசேகரன் வெர்சஸ் ஜீவானந்தம் என அதிரடியான கதை களத்துடன் நகர்ந்து வருகிறது.

ஜீவானந்தத்தின் உண்மை முகம் குணசேகரன் வீட்டு பெண்களுக்கு தெரிய வந்து எப்போது அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் அதிரடியாக இரண்டு புதிய கதாபாத்திரங்கள் களமிறங்க உள்ளது.
அவர்கள் வேறு யாரும் இல்லை ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி மற்றும் மகள் வெண்பா என்ற கதாபாத்திரம் தான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளவர்களின் புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்துள்ளன.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக இவர்கள் மூலம் கதையில் அதிரடி திருப்பங்கள் ஏற்படுமா என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
