
இரண்டே நாளில் 100 கோடியை தாண்டி உள்ளது ஜமான் படத்தின் இந்திய வசூல்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என பலர் இணைந்து நடித்து வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஜவான்.

உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 75 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. உலகளவில் வசூல் 129 கோடி ரூபாயை தாண்டியது.

இந்த நிலையில் இரண்டாவது நாளில் இந்த படம் இந்தியாவில் 50 கோடி ரூபாய் வசூலை பெற்று இரண்டு நாளில் ரூ 125 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.