2 actors join in good bad ugly movie
2 actors join in good bad ugly movie

குட் பேட் அக்லி படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மனம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவிஸ் தயாரிப்பிலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பிலும் இந்த படம் உருவாகி வருகிறது.

படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.இந்த நிலையில் இந்த படத்தில் புதிதாக நட்டி நட்ராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகின.

குட் பேட் அக்லி படத்தில் ஒளிப்பதிவாளராக நட்டி நடராஜ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.