தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் கிராமத்தில் வரும் 26- ஆம் தேதி வெங்கடேஷ் பண்ணையாரின் 15- வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் இன்று (செப்டம்பர் 25) மாலை 6 மணி முதல், வரும் 27- ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.