100% Motor Tax Free for Electronical Vechiles in Tamilnadu

மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

100% Motor Tax Free for Electronical Vechiles in Tamilnadu : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த கொரானா வைரஸ் பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து செயலாற்றி வருகிறது.

கடந்த வருடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மின்சார வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்குள் கொரானா வைரஸ் பரவ தொடங்கியதால் இந்த திட்டம் அமலுக்கு வரவில்லை.

இந்த நிலையில் தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 31.12.2022 வரை மின்சார வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி மோட்டார் வரி செலுத்துவதிலிருந்து விசார பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை அடுத்து மின்சார வாகன ஓட்டிகள் பலர் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.