இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பல புதிய மாற்றங்களும், எதிர்பாராத சில நீக்குதலும், இணைப்பதும் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் முன்னாள் இந்திய அணியில் சிறந்த வீரராக இருந்த கம்பீர் மறைமுகமாக தோனிக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார்.
கிரிக்கெட் தேர்வு ஆணையம் 2019 வரை தோனி நிச்சயம் அணியில் இருப்பார் என கூறியதை அடுத்து, பலரும் பல விதமாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் “சிறந்த ஆட்டத்தை அளவுகோலாய் கொண்டே வீரர்கள் விளையாட வேண்டும்” என்று கம்பீர் கூறியுள்ளார். தோனி ஒரு நாள் தொடரில் அவ்வளவாக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது இல்லை.
அதே சமயத்தில் இந்திய அணியில் சில புதிய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடவும், ஆல்ரவுண்டராகவும் இருக்கும் நிலையில் தோனி இதற்கு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுவர் என நம்பப்படுகின்றது.