நேற்று நடைபெற்ற தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்சுடனான போட்டியில் தொடக்கத்தில் நன்றாக தொடங்கிய தமிழ் தலைவாஸ் 18-18 என்று சமநிலையில் இருந்தது .இந்த நிலை நீடித்து இருந்தால் தமிழ் தலைவாஸ்க்கு வெற்றி பெரும் வாய்ப்பு இருந்து இருக்கும். நல்ல கூட்டு முயற்சியால் கொண்ட தெலுங்கு டைட்டன்ஸ் மெதுவாக புள்ளிகளை அதிகரித்தது. தமிழ் தலைவாஸ் அணி போராடிய போதும் தெலுங்கு டைட்டன்ஸ் புள்ளிக்கு சம நிலை பெற முடியவில்லை .

பின்னர் தெலுங்கு டைட்டன்ஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. இறுதியில் 33-28 என்ற புள்ளியில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி அடைந்தது

3 போட்டிகளில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி அடைந்து உள்ளது.