பரம்பொருள் படத்திற்காக இணைந்திருக்கும் யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வருபவர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத். ஏராளமான ரசிகர் பட்டாளங்களை தனது இசையால் கட்டி போட்டு இருக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து பாடல் ஒன்றை வெளியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். இதனால் உற்சாகமடைந்திருந்த ரசிகர்கள் அப்பாடலுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் அரவிந்த ராஜ் இயக்கத்தில் அமிதாஷ் பிரதான் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள “பரம்பொருள்” என்னும் படத்திற்கு இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா இசையில் ராக்ஸ்டார் அனிருத் யுவனுடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு கிலிம்ஸ் வீடியோவுடன் அறிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.