yogi-babu
ரகசிய திருமணத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி யோகி பாபு பேசியுள்ளார்.

Yogi Babu Marriage Secrets : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யாகி பாபு. இவருக்கு கடந்த 5-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் சொந்த ஊரில் உள்ள குலதெய்வ கோயிலில் ரகசிய திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மொத்தம் 10 பேர் கூட கலந்து கொள்ளவில்லை. பெண்ணின் பெற்றோர்கள் கூட கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் அவசர அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. எனக்கு அனைவரையும் அழைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருந்தது. அது முடியாமல் போய் விட்டது.

அடுத்த மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது, அதற்கு அனைவரையும் அழைப்பேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.