நடிகர் யோகி பாபு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர்தான் யோகி பாபு. தனது காமெடி மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி இருக்கும் இவர் வெறும் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் முத்திரையை பதித்த இவர் தற்போது பான் இந்தியா திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் பாலிவுடில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை தொடர்ந்து பிரபல பாலிவுட் இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் பான் இந்தியா திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் யோகி பாபு பிறமொழி திரைப்படங்களிலும் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.