முதுகில் போட்ட டாட்டூவை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் தான் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதுகில் போட்ட டாட்டுவை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.