கே ஜி எஃப் 2 படத்தின் டிரைலர் வெளியாகி மிரட்டி வருகிறது.

Yash About KGF2 Vs Beast : கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. இதனால் தமிழகத்தில் இந்த இரண்டு படத்திற்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் நேற்று வெளியான கே ஜி எஃப் 2 படத்தின் டிரைலர் அதன் மீதான எதிர்பார்ப்பை இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் யாஷ் அவர்களிடம் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் கேஜிஎப் 2 Vs பீஸ்ட் என கேள்வி எழுப்பியதற்கு Vs எல்லாம் இல்லை. கே ஜி எஃப் 2 மற்றும் பீஸ்ட் என பதிலளித்தார்.

இதுவா அதுவா என பேச இது அரசியல் இல்லை, சினிமா. இரண்டுமே ரசிகர்களால் பார்க்க வேண்டிய படம்தான் என கூறியுள்ளார். யாஷ் அளித்த இந்த பதில் விஜய் ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.