Oplus_0

கோபியிடம் சேலஞ்சு விட்டுள்ளார் எழில். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அப்பாவாக போகும் விஷயம் தெரிந்து தனது பசங்க கொடுத்த ரியாக்ஷனில் நினைத்து கோபி உட்கார முடியாமல் டென்ஷனாக இங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்க ராதிகா என்னாச்சு? என்ன பிரச்சனை என்று கேட்கிறார். 

Oplus_0

என் புள்ளைங்களோட ரியாக்சன் பார்த்துள்ள இனிமே அவங்க முகத்துல நான் எப்படி முழிப்பேன்? இனியா ச்சீ-னு சொல்லும்போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? என்று கோபி புலம்ப ராதிகா இதெல்லாம் இமிடியேட் ரியாக்ஷன், போகப் போக அவங்களை புரிஞ்சிகிட்டு இதையெல்லாம் ஏத்துப்பாங்க ஏற்று சொல்கிறார். உங்கம்மா இந்த குழந்தை வேண்டாம் என்று சொன்னாங்க ஆனா உங்க புள்ளைங்க யாரும் அப்படி சொல்லல அவங்க எல்லாரும் மெச்சூரிட்டியோட தான் இருக்காங்க என்று பேசுகிறார். 

கோபி நீ உன்ன பத்தி உன் பக்கத்துல இருந்து மட்டும் தான் யோசிக்கிற, என்ன பத்தி யோசிக்க மாட்ற என புலம்புகிறார். நாம ஒன்னும் வெளிநாட்டில் இல்ல இந்தியாவுல சென்னையில இருக்கும் இங்க இருக்க கலாச்சாரமே வேற என் பிள்ளைங்களுக்கு குழந்தை இருக்கும்போது நான் அப்பாவாக போறது தெரிஞ்சா எல்லாரும் என்ன பேசுவாங்க என்று புலம்புகிறார். ராதிகா இதைப் பற்றி பேச வர ப்ளீஸ் ராதிகா கொஞ்சம் நான் புலம்பிக்கிறேன் என்று சொல்கிறார். 

Oplus_0

அதன் பிறகு பாக்யா தூக்கம் இல்லாமல் நடந்த விஷயங்களை நினைத்து கலங்கிக் கொண்டிருக்க திடீரென கதவை திறக்கும் சத்தம் கேட்க உள்ளே வருவதை பார்த்து கண்களை மூடி கொள்கிறார். கண்ணீருடன் வந்த எழில் பாக்கியா பக்கத்தில் உட்கார்ந்து அவரின் தலையை கோதி கண் கலங்க பாக்யா தூங்குவது போல நடிக்கிறார். எழில் வெளியே சென்றதும் திரும்பவும் கதவை திறக்கும் சத்தம் கேட்க செழியன் உள்ளே வந்து அதேபோல் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து கண்கலங்கி வெளியே செல்கிறார். 

இதனால் பாக்கியா கண்கலங்கி அழ இனியா தூக்கத்தில் அம்மா என்று சொல்ல அம்மா இங்கே பக்கத்தில் தான் இருக்கேன் என்று இனியாவை தட்டிக் கொடுத்து தூங்க வைத்து கண் கலங்குகிறார். 

மறுநாள் காலையில் ஜாக்கிங் செல்லும் போது எழில் கோபியை பார்க்க அவரிடம் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லி நீங்க இந்த வீட்ல இருக்கிறது எங்களுக்கு பிடிக்கல எங்களோட வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம். உங்களோட பிரச்சனை எல்லாம் நாங்க தூக்கிட்டு சுமக்கணும்னு அவசியம் கிடையாது நீங்களும் உங்க பேமிலியும் வீட்டை விட்டு வெளியே போயிடுங்க என்று சொல்கிறார். கோபி இது நான் கட்டின வீடு என்று டயலாக் பேச இது எங்க அம்மாவோட வீடு. இனிமேலும் உங்களை நான் அந்த வீட்டுல இருக்க விடமாட்டேன் என்று சொல்கிறார். 

Oplus_0

கோபி நீ எப்படி உங்க அம்மாவுக்காக பேசுகிறாயோ அதே மாதிரி தான் நான் என் அம்மாவுக்காக அந்த வீட்ல இருக்கேன் அவங்க போன் சொல்லாம நான் வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்று சொல்ல எழில் உங்களை எப்படி போக வைக்கணும்னு எனக்கு தெரியும் இன்னைக்கு தான் உங்களுக்கு அந்த வீட்டில கடைசி நாள் என்று சவால் விடுகிறார். 

இதையடுத்து வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் எழில் சொன்னதை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். ராதிகா நானும் அதுதான் சொல்றேன் இதை வீட்டை விட்டு நாம வெளியே போயிடலாம் என்று சொல்ல கோபி அவன் சொன்ன நாம போயிடணுமா அதெல்லாம் போக முடியாது என்று சொல்கிறார். இது நான் கட்டுன வீடு என்று சொல்ல இடியட் மாதிரி பேசாதீங்க இது இப்போ பாக்கியாவோட வீடு அவங்க சொன்னா நம்ம போய் தான் ஆகணும் என்று ராதிகா சொல்கிறார். எங்க அம்மா சொல்ற வரைக்கும் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று கோபி சொல்ல உங்க அம்மாவே போக சொன்னாலும் சொல்லுவாங்க என்று ராதிகா ஷாக் கொடுக்கிறார். 

அடுத்து எழில் வீட்டுக்கு வர செழியன் ஜாக்கிங் கிளம்ப நான் ஆள் கிட்ட வீட்டை விட்டு பாக்க சொல்லி பேசிட்டேன். அவர் அது எல்லாத்தையும் அவருடைய பொண்டாட்டி கிட்ட சொல்லி இங்க வந்து ஒரு பெரிய ட்ராமா கிரியேட் பண்ணுவாரு சீக்கிரம் நீ போயிட்டு வா என்னால தனியா சமாளிக்க முடியாது என்று சொல்ல செழியன் சீக்கிரம் வந்துறேன் என்று ஜாக்கிங் கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.