விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு; விசாரணை..

நடிகரும், தமிழக வெற்​றிக்​ கழகத் தலை​வரு​மான விஜய்​யிட​மிருந்து தனக்கு சிறப்புத் திரு​மணச் சட்​டத்​தின்கீழ் விவாகரத்து கோரி இங்​கிலாந்து பிரஜை​யான அவரது மனைவி சங்​கீதா செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்தில் தாக்​கல் செய்​திருந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:

‘எனக்​கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10-ல் இங்​கிலாந்தில் பதிவுத் திரு​மணம் நடந்​தது. அதன்​பிறகு எங்​களது திரு​மணம் இந்து முறைப்​படி 1999 ஆகஸ்ட் 25-ல் சென்னை ராஜா முத்தையா மன்​றத்​தில் நடந்​தது. எனது கணவர் தற்போது தவெக கட்சியைத் தொடங்கி அதன் தலை​வ​ராக உள்​ளார். எங்களுக்கு ஜேசன் சஞ்​சய்​ (25) என்ற மகன், திவ்யா சாஷா(20) என்ற மகள் உள்ளனர்.

தொடக்கத்​தில் எங்​களது இல்லற வாழ்க்​கை​யில் பிரச்சினையின்றி சுமூக​மாக சென்​றது. படப்​பிடிப்பு இல்​லாத கால​கட்​டங்​களில் நாங்​கள் குடும்​பத்​துடன் இங்​கிலாந்​துக்கு சென்​று​விடு​வோம். அதே​போல நானும் படப்​பிடிப்பு தளங்​களுக்​கும், திரைப்​படங்​கள் தொடர்​பான நிகழ்​வு​களி​லும் பங்​கேற்​றுள்​ளேன். சில நேரங்​களில் எங்​களுக்​குள் அவ்​வப்​போது சிறுசிறு பிரச்​சினை​கள் ஏற்​பட்​டாலும் அதை நாங்​களே சரிசெய்​து​கொண்டு வாழ்க்கையை சீராக நடத்தி வந்​தோம்.

ஆனால், கடந்த 2021 ஏப்​ரல் மாதம் எனது கணவருக்​கும், ஒரு நடிகைக்​கும் திரு​மணத்தை மீறிய தொடர்பு இருந்​தது தெரிய​வந்​தது. இதனால் மனதள​வில் பாதிப்​படைந்​தேன். அதன்​பிறகு அந்த உறவைத் துண்​டித்து விடு​வ​தாக விஜய் உறுதி​யளித்தார்.

ஆனால், அதன்​படி அவர் நடந்துகொள்​ள​வில்​லை. இந்​தப் பிரச்​சினையை சுமூக​மாகப் பேசி ஒரு முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்​சிகள் எது​வும் பலனளிக்​க​வில்​லை. குழந்​தைகள் எதிர்காலம் கருதி நானும் அமைதிகாத்து வந்​தேன்.

ஆனால், விஜய் என்​னுடன் இருந்த திருமண பந்​தத்தை அறவே துண்​டித்​துக் கொண்​ட​தால் மனரீதி​யாக​வும், உடல் ரீதி​யாக​வும் பாதித்து தனிமைப்​படுத்​தப்​பட்​டேன்.

இந்​நிலை​யில் மனைவி என்ற முறை​யில் எனக்​கும், குடும்​பத்​துக்​கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவி​களை​யும் எனது கணவர் விஜய் நிறுத்தி விட்​டார். தற்​போது எங்​களுக்​குள் எந்த உறவும் இல்​லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்​டும். இவ்​வாறு தனது மனு​வில் சங்​கீதா கூறியிருந்தார்.

இந்த மனுவை விசா​ரித்த செங்​கல்​பட்டு முதன்மை அமர்வுநீதி​மன்​றம், இந்த வழக்கை செங்​கல்​பட்டு குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றி உத்​தர​விட்​டுள்​ளது. அதன்​படி இந்​த வழக்​கு ஏப்​ரல் 20-ந்தேதி விசாரணைக்​கு வரவுள்ளது.

wife sangeetha about vijay divorce case
wife sangeetha about vijay divorce case