சிஎஸ்கே அணிக்கு அனிருத் தீம் மியூசிக் போட மறுப்பு: ஏன் தெரியுமா?

சிஎஸ்கே அணிக்கு அனிருத் தீம் மியூசிக் இசைக்க மறுப்பு தெரிவித்ததன் பின்னணி என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை தொடர்ந்து அனிருத் ‘ஜன நாயகன்’ படத்தில் இசையமைத்து வருகிறார். இப்படம் விஜய்க்கு கடைசிப் படம் என்பதால், ஸ்பெஷலாக பல பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார் என கூறப்படுகிறது.
செம பிஸியான நிலையில் அனிருத், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸிற்கு தீம் மியூசிக் போட்டுக் கொடுக்க மறுத்திருக்கிறார். அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணம் என்ன என்றால், ‘2018-ம் ஆண்டு கம்பேக் கொடுத்த சிஎஸ்கே கோப்பையையும் வென்று அசத்தியது. அப்போது, சிஎஸ்கே நிர்வாகத்தினர் அனிருத்திடம் தங்கள் அணிக்கு தீம் மியூசிக் ஒன்றை கம்போஸ் செய்து கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால், அனிருத் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
சிஎஸ்கே என்றாலே ரசிகர்களுக்கு நினைவில் வருவது “விசில் போடு” பாடல் தான். அந்த பாடல் கேட்டால் புல்லரிக்கும். அந்த தீம் மியூசிக்கிற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த தீம் மியூசிக் உருவாக்கிய மேஜிக்கை என்னால் ஈடுகட்ட முடியாது.
அதாவது, எப்படி ரஜினி சாருக்கு அண்ணாமலை தீம் மியூசிக்கோ, அதேபோல் சிஎஸ்கேவுக்கு விசில் போடுதான் இருக்க வேண்டும். அது ரசிகர்கள் மத்தியிலும் வேறலெவலில் ரீச் ஆகிவிட்டது. அதனால், என்னால் மீண்டும் ஒரு தீம் மியூசிக் போட முடியாது’ என கூறி மறுத்திருக்கிறார்.

