வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ வைரல்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருந்தார்.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக இப்படத்தின் இடைவேளை காட்சி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருந்தது. இந்த சண்டை காட்சியை படக்குழுவினர் ஒரே ஷாட்டில் எடுத்துள்ளனர். தற்போது அந்த சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

YouTube video