படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ள சிம்பு.

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு!!… வெளியான லேட்டஸ்ட் தகவல்!.

கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியிருந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் , நீரஜ் மாதவ் மற்றும் சித்திக் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் 50 ஆவது நாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது, இதில் பங்கேற்று இருந்த சிம்பு பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு!!… வெளியான லேட்டஸ்ட் தகவல்!.

அதில் அவர், ஃபேன்ஸ் எல்லாரும் புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன். எல்லா ஃபேன்சும் ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனா நான் என் ஃபேன்ஸை தூக்கி மேல வைக்கிறவன். என் படத்துக்கு மட்டும் இல்லை எல்லாருடைய படத்துக்கும் அப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க என்று அன்போடு ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.